அடித்துத் தூக்கி ஆட்சி அமைக்கப்போகும் பாஜக கூட்டணி... காங்கிரஸ் -திமுக கூட்டணி அதிர்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Apr 29, 2021, 7:41 PM IST
Highlights

இதன் மூலம் பாஜக கூட்டணி முதன்முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

30 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கே 81.64 சதவீத வாக்குகள் பதிவாயின. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகான ரிபப்ளிக் டிவியின் கருத்துக் கணிப்பில் புதுவையில் பாஜக கூட்டளின் 16 முதல் 20 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 11 முதல் 13 தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி முதன்முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
 

click me!