#BreakingNews: தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சியே... அடித்துக் கூறும் கருத்து கணிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Apr 29, 2021, 7:28 PM IST
Highlights

தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது

தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமான தேர்தல் நடைபெற்றது. அதில் 71.43 சதவிகித வாக்குகள் பதிவாயின. அதிமுக தலைமையிலான கூட்டணி, திமுக கூட்டணி, இதேபோல, நடிகர் கமல்ஹாசன் தலைமையில் ஒரு கூட்டணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கினார். இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் ABP-Cvoter Exit Poll Results 2021 கருத்துக்கணிப்புப்படி Live: 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி திமுக கூட்டணி 166 தொகுதிகளிலும், அதிமுக 64 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், மக்கள் நீதி மய்யம் ஓரிடத்திலும், அமமுக ஒரு தொகுதியிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெறும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ரிபப்ளிக் டிவி, சி.என்.எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பிலும்  அதிமுக 58 முதல்68 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், திமுக கூட்டணி 160 முதல் 170 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் எனவும், அமமுக 4 முதல் 6 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மக்கள் நீதி மய்யம் 0- 2 இடங்களில் வெற்றி பெறலாம் மற்றவர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
 

click me!