
தமிழகத்தில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து வருவதாவும் இனிமேல் பாஜக உதவி இல்லாமல் இங்கு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற பா.ஜ.க. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை, அவர் பேசியதாவது: தமிழகத்தில் பா.ஜ., உதவி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என கூறினார்
தமிழகத்தில் பா.ஜ.க., காலூன்ற முடியாது என கூறுகிறார்கள். அவர்கள் முடியாது என சொல்ல சொல்ல பாஜக இன்னும் ஆழமாக வேரூன்றி கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
கட்டப்பஞ்சாயத்துக்கு அங்கீகாரம் கொடுத்ததே திமுகதான். இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமானால் அது பாஜக.,வால் தான் முடியும் என்று தமிழிசை கூறினார்.
தமிழகத்தில் ஒருபோதும் மத்திய அரசு இந்தியைத் திணிக்காது என தெரிவித்த தமிழிசை, அதேநேரத்தில் மொழியை வைத்து மக்களை வஞ்சித்தது திமுக என குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் பா.ஜ.க. துணையில்லாமல் எந்த கட்சியும் இனி ஆட்சியமைக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளதாகவும், . தமிழகத்தில் அஸ்திவாரத்தை பலப்படுத்தி கொண்டு இருப்பதாகவும் தமிழிசை தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து வருவதாவும், விரைவில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் விரைவில் காவி கொடி பறக்கும் என்றும் தமிழிசை கூறினார்.