
மருத்துவமனை திறப்பு விழாவில் திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கைதுக்கு பதிலாக நடந்தால், அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும்.
ஏனென்றால் அவர்களது கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் இருக்கிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருந்த திமுக எம்எல்ஏக்கள் 3 பேரை, போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில அரசு மருத்துவமனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. அதற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன. அதில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பெயர்கள் மட்டுமே இருந்தது. ஆனால், திமுக எம்எல்ஏக்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.
இதுபற்றி திமுக எம்எல்ஏக்கள், என்னை 8ம் தேதி காலை தொடர்பு கொண்டார்கள். நான் அவர்களிடம், என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டேன்.
அதற்கு, முதலமைச்சர் வரும்போது,கருப்பு கொடி காட்டப்போகிறோம் என கூறினார்கள். நானும் அதற்கு கட்சியின் சார்பில் அனுமதி அளிக்கிறேன். ஒப்புதல் அளிக்கிறேன் என தெரிவித்தேன்.
ஆனால், இதை அறிந்த தமிழக அமைச்சர்கள், அவசரம் அவசரமாக புதிதாக அழைப்பிதழ் அச்சடித்து, வினியோகம் செய்தார்கள். அதில் நமது எம்எல்ஏக்கள் பெயர்கள் இருந்தது. அதுமட்டுமில்லாமல், அமைச்சர் விஜயகுமார், நமது திமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் போன் செய்து நிச்சயம் வரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதையும் 8ம் தேதி மாலை எனக்கு போன் செய்த எம்எல்ஏக்கள் தெரிவித்தார்கள். அதை கேட்டு, நானும் சென்று வாருங்கள் என கூறி அனுப்பினேன்.
ஆனால், அடுத்த நாள் காலை, மருத்துவமனை திறப்பு விழாவுக்கு புறப்படும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 எம்எல்ஏக்களையும் போலீசார் கைது செய்தனர். இது கண்டிக்கத்தக்க சம்பவமாகும்.
உண்மையிலேயே போலீசார் கைது செய்ய வேண்டிய ஆட்கள் 2 பேர். ஒன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாவது அமைச்சர் விஜயபாஸ்கர். அவர்கள் மீது வருமான வரித்துறையினர் பதிவு செய்த வழக்கு இன்றும் அப்படியே இருக்கிறது.
குற்றத்தை செய்த அவர்கள் வெளியே இருக்கும்போது, மக்களுக்காக போராடும் திமுக எம்எல்ஏக்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இதனை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.