கோவை கார் குண்டு வெடிப்பு பகுதியில் அண்ணாமலை..! கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம்

By Ajmal KhanFirst Published Oct 31, 2022, 10:25 AM IST
Highlights

கோவை கார் குண்டு வெடிப்பு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அங்குள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். 

கோவை கார் வெடி விபத்து

கோவையில் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் முதலில் விபத்து என அனைவரும் நினைத்த நிலையில் திட்டமிட்ட கார் வெடி குண்டு விபத்து என தெரியவந்தது. இதனையடுத்து விபத்தில் இறந்த ஜமேசா முபின் என்பவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்போடு தொடர்பில் இருந்ததும்  தெரியவந்தது. இதனையடுத்து மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் கைது செய்தனர். இந்த கார் வெடி விபத்து வழக்கை என்ஐஏ அமைப்புக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரை செய்தது. இந்தநிலையில் கோவை வெடி விபத்து தொடர்பாக பாஜக மற்றும் தமிழக அரசுக்கு இடையே தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

தீவிரவாத தொடர்புள்ளவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு தமிழக காவல்துறை பதில் அளித்தது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக டிஜிபியை சைலேந்திர பாபுவை கடுமையாக விமர்சித்து அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் கோவை கார் வெடி விபத்து நடைபெற்ற கோவை உக்கடம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை  மாவட்ட நிர்வாகிகளோடு சென்று  பார்வையிட்டார். இதனையடுத்து அங்குள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். கார் வெடி விபத்து நடைபெற்ற பகுதிக்கு  அண்ணாமலை வருவதையொட்டி அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தி உள்ளனர்.  கோவிலை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும்  கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஒத்த ஓட்டு ஓட்டைவாய் அண்ணாமலை.. உளறிக் கொட்டாதீங்க.. சும்மா எகிறி அடிக்கும் செந்தில் பாலாஜி..!

click me!