ஜம்ப், ஜம்ப்… திருமா ஜம்ப்…! சமூக நீதின்னு கம்பு சுத்துனது எல்லாம் என்னாச்சு? திருப்பியடிக்கும் பாஜக...

By manimegalai aFirst Published Nov 29, 2021, 10:10 PM IST
Highlights

காலில் அணிந்திருக்கும் ஷூ நனையாமல் காரில் ஏறிய திருமாவளவனின் வீடியோவை தொடர்ந்து சமூக நீதி, சமத்துவம் என்று கம்பு சுத்தறது எல்லாம் சும்மாதானா என்று பாஜக கேள்வி எழுப்பி இருக்கிறது.

காலில் அணிந்திருக்கும் ஷூ நனையாமல் காரில் ஏறிய திருமாவளவனின் வீடியோவை தொடர்ந்து சமூக நீதி, சமத்துவம் என்று கம்பு சுத்தறது எல்லாம் சும்மாதானா என்று பாஜக கேள்வி எழுப்பி இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் வீடு சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு குடியிருப்பு காலனியில் முதலாவது அவென்யூவில் உள்ளது. தொடர்ந்து சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக, அவரின் வீட்டில் இன்று மழை தண்ணீர் புகுந்தது.

ஆனால் எம்பியாக இருக்கும் திருமாவளவன் இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும். அதற்காக வழக்கம் போல் உடையணிந்து, காலில் ஷூவுடன் தயாரான திருமாவளவன், மாடியில் இருந்து கீழே இறங்கினார்.

அதன் பிறகு தான் தெரிந்தது கிட்டத்தட்ட 2 அடி உயரத்துக்கு மழைநீர் உள்ளே வந்திருப்பது…! ஷூவுடன் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட… உடன் இருந்த விசிக நிர்வாகிகள் தாங்கள் தோளில் தூக்கி செல்கிறோம் என்று கூறி உள்ளனர்.

அதை திருமாவளவன் மறுக்க என்ன செய்யலாம் என்று யோசித்த சிறுத்தைகள், அங்கிருந்த இரும்பு நாற்காலிகளை வரிசையாக வைத்தனர்.  ஒவ்வொன்றாக அதை தாண்டி, தாண்டி கார் நிறுத்தப்பட்டு இருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தார். ஜம்ப்… ஜம்ப் என ஜம்ப்பாகி அவர் சென்ற வீடியோ இணையத்தில் சக்கை போடு போடுகிறது.

இந்த வீடியோ எந்தளவுக்கு வைரல் ஆகி உள்ளதோ, அதே அளவுக்கு எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. தண்ணியில் கால் படாமல் ஏன் இப்படி போனார் திருமாவளவன்… சமூக நீதி பேசுவது சரியா என்றும் கேள்விகள் எழுந்தன.

திருமாவின் இந்த வீடியோவை பார்த்த பாஜகவின் வினோஜ் செல்வம் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

என்ன @thirumaofficial  சார்? கூட இருக்குறவங்கள இப்படி தான்  நடத்துவீங்களா? சமூக நீதி, சமத்துவம்னு கம்பு சுத்துறதெல்லாம் சும்மா தானா? மழை தண்ணில கால் வச்சு உங்களால நடக்க முடியாம பூர்வ குடி மக்களை அதிகாரம் பண்ணலாமா.

அடங்கமறு!

அத்துமீறு!

இதுக்கெல்லாம் அர்த்தம் இதுதானா? என்று கேள்வி கேட்டு உள்ளார்.

இந்த பதிவை கண்ட சிறுத்தைகளோ அனல் பறக்கும் பதிலடிகளை போட்டு தாக்கி உள்ளனர். திருமாவளவனின் காலில் புண் இருப்பதால் தான் அவர் தண்ணீரில் கால் வைக்கவில்லை என்று பதில் கூறி உள்ளனர்.

திருமா எங்களின் கடவுள், அவரது கால் படாமல் தோளில் சுமந்து செல்வது சிறுத்தைகளுக்கு பாக்யம் என்று சிலர் பதிவிட்டு இருக்கின்றனர். அவர் பார்க்காது சேறும், சகதியுமா, வேற வேலை இருந்தால் பாருங்கள் என்று திருப்பி கமெண்ட் போட்டுள்ளனர்.

அவர் ஏன் அப்படி சென்றார் என்று ஒரு அன்பர் பதிவிட்டு உள்ளார். அவரது கால்கள் தொடர் வீக்கத்தில் இருந்ததால் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இது விசிக கடைசி கோடி தொண்டனுக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

ஆனாலும் திருமாவை தாங்கி சிறுத்தைகள் பதிவை வெளியிட்டாலும், எதிர்ப்பும், கண்டன பதிவுகளும் குறைந்ததாக தெரியவில்லை…!!

click me!