டாஸ்மாக் சம்பாத்தியத்தில் கஜானாவை நிரப்ப மாட்டோம்! நாங்கள் நல்ல வழியில் சம்பாதிப்போம்... எடப்பாடி அரசை விளாசிய பி.ஜே.பி. வி.ஐ.பி!

By vinoth kumarFirst Published Nov 27, 2018, 12:00 PM IST
Highlights

தமிழக அரசின் கஜானா மத்திய அரசின் கையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்,  அப்படியிருந்தால் முதலில் நாங்கள் டாஸ்மாக்கை இழுத்து மூடிடுவோம். இந்த மாதிரியான வழியில் வரும் பணத்தை நாங்கள் விரும்பமாட்டோம். எங்கள் கையில் கஜானா இருந்தால் நல்ல வழியில் மட்டுமே நிரப்புவோம், நல்ல வழியில் மட்டுமே செலவு செய்வோம்.

கஜா புயலை விட, அதன் நிவாரணத்துக்கு கேட்டிருக்கும் பதினைந்தாயிரம் கோடியை வைத்து நடக்கும் அரசியல் செய்யும் சேதாரம் மிக அதிகமாகவும், மோசமாகவும் இருக்கும் போல. மத்தியமைச்சர் பொன்னார் ஒரு கருத்தை சொல்ல, தமிழக அமைச்சர்கள் வேறு கருத்தைச் சொல்ல...என்று பரபரக்கு பாலிடிக்ஸ். 

இந்நிலையில் பொட்டி சாவி மத்திய அரசின் கையில் இருக்குது. அவங்க பணம் கொடுத்தால்தான் நிவாரணத்துக்கு தர முடியும்.’ என்று ஏகத்துக்கும் பேசியிருந்தார் மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை. இது பி.ஜே.பி. வட்டாரத்தில் பெரும் உஷ்ணத்தை உருவாக்கிவிட்டது. காரணம், சேதாரத்தால் ஏற்கனவே நொந்து கிடக்கும் மக்களின் மனதில், என்னமோ நாம்தான் பணத்தை வெச்சுக்கிட்டு தர மறுக்கிறோம்! என்பது போல் ஆகிவிடாதா! இது தேர்தல் அரசியல் ரீதியில் நமக்கு சிக்கலை உருவாக்கிவிடாதா? என்பதே அவர்களின் கடுப்பு. 

இந்நிலையில் இந்த விவகாரத்தை  பற்றிப் பேசியிருக்கும் பி.ஜே.பி.யின் தேசியக்குழு உறுப்பினரான இல.கணேசன் “பெட்டி சாவி எங்களின் கையில் இருக்கிறது! என்று தம்பிதுரை சொன்னது சிரிப்பை தருகிறது. அவரால மாநில அரசைப் பற்றி எதுவும் கூற முடியவில்லை, அதனால் மத்திய அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார். 

தமிழக அரசின் கஜானா மத்திய அரசின் கையில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்,  அப்படியிருந்தால் முதலில் நாங்கள் டாஸ்மாக்கை இழுத்து மூடிடுவோம். இந்த மாதிரியான வழியில் வரும் பணத்தை நாங்கள் விரும்பமாட்டோம். எங்கள் கையில் கஜானா இருந்தால் நல்ல வழியில் மட்டுமே நிரப்புவோம், நல்ல வழியில் மட்டுமே செலவு செய்வோம். எங்கள் கட்சி ஆளும் மாநிலங்களைப் பார்த்தாலே இது புரியும். எனவே தம்பிதுரையின் குற்றச்சாட்டு முழு தவறு.” என்று பொரித்திருக்கிறார். 

click me!