
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி அளித்து வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சிகளில் எல்லா இடங்களிலும் ஊழல் நிலவியது. முததலாக் தடைச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த சட்டத்தை
அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்த அதிமுக எம்.பி.-க்கள் தடையாக உள்ளனர் என்றார்.
மேலும், பேசிய அவர், தமிழக அரசை கலைக்கும் நோக்கம் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை. ஆனாலும், விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற
தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வந்தாலும் வரலாம் என்று கூறினார்.
எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இவ்வாறு கூறினார்.