அமித்ஷா கோலோச்சிய பாஜக தேசிய தலைவர் பதவியில் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜேபி நட்ட வரும் 22ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன .
அமித்ஷா கோலோச்சிய பாஜக தேசிய தலைவர் பதவியில் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜேபி நட்ட வரும் 22ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன . அமித்ஷா உள்துறை அமைச்சரானதை அடுத்து ஜேபி நட்டாவுக்கு தலைவர் பதவி வாய்ப்பு வழங்கப்படுகிறது . பாஜக தலைவரின் பதவி என்பது அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது , வாஜ்பாய் , அத்வானி , அமித்ஷா என மிகப் பெரிய ஆளுமைகள் அப்பதவியில் கோலோச்சி பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்துள்ளனர் . எனவே பாஜகவின் முடிவுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான பதவியாக பாஜக தலைவர் பதவி கருதப்படுகிறது.
பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா தேர்தல் வியூகங்களை வகுப்பதில் மிக வல்லவராக இருந்ததின் காரணமாக , அவருக்கு அந்த பதவி மிகவும் பொருத்தமாக இருந்தது இந்நிலையில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததையடுத்து தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார் . அதிலிருந்து பாஜக தேசிய தலைவர் பதவி நிரப்பப்படாமலேயே இருந்தது . இந்நிலையில் சரியான தலைவரை நியமிக்க வேண்டும் என மோடி அமித்ஷா காத்து வந்த நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜே பி நாட்டாவை பாஜகவின் தேசியத் தலைவராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த நட்டா முதன்முதலில் பாஜக இளைஞரணி பிரிவு தலைவராக பொறுப்பு வகித்தவர் ஆவார் . அதன்பிறகு 2014ஆம் ஆண்டு அவருக்கு தேசிய தலைமை பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது .
அதன்பின்னர் பாஜக நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் , அமித்ஷா அமைச்சா் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது , எனவே அப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக நட்டா இருப்பார் என்பதாலும் அனைத்து தரப்பு தலைவர்களையும் அனுசரித்து செல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்பதாலும் ஜேபி நட்டாவை தேசிய தலைவராக நியமிக்க அக்கட்சியினர் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஜேபி நோட்டாவின் பூர்வீகம் இமாச்சலப்பிரதேசம் என்றாலும் என்றாலும், அவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும் பீகார் மாநிலம் பாட்னாவில் தான் . நட்டா ஆர்எஸ்எஸ் அரசியலை அடிப்படையாக கொண்டவர் ஆவார்...