தொடர்ந்து கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி... அண்ணாமலை அதிரடி கணிப்பு..!

Published : Aug 23, 2021, 09:17 PM IST
தொடர்ந்து கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி... அண்ணாமலை அதிரடி கணிப்பு..!

சுருக்கம்

தமிழகத்தில் தொடர்ந்து கடுமையாக உழைத்தால் பாஜக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார்.  

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில நிர்வாகிகளும் மாவட்ட தலைவர்களும் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பற்றியும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, “ நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பாஜக கூட்டணி  கைப்பற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், வேல் யாத்திரை எனத் தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் கட்சி பணியாற்றியதை போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தீவிரமாக உழைக்க வேண்டும். தொடர்ந்து கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்.” என்று அண்ணாமலை பேசினார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!