கருணாநிதி வைர விழா மூலம் பா.ஜ.க விளம்பரம் தேட பார்க்கிறது... – மூக்கை உடைத்த முக ஸ்டாலின்...

First Published May 12, 2017, 1:21 PM IST
Highlights
bjp publicity for karunanithi function by mkstalin


கருணாநிதியின் வைர விழாவை வைத்து பா.ஜ.க. விளம்பரம் தேட பார்ப்பதாகவும் அவர்களின் கனவுக்கு நான் உதவ மாட்டேன் எனவும் எதிர்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி அக்கட்சியின் உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், இதை போற்றும் வகையில் திமுக சார்பில் வைர விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் 7 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இதில் பா.ஜ.வுக்கு அழைப்பு விடுக்க போவதில்லை எனவும் அக்கட்சியின் செயல் தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே அறிவிருத்திருந்தார்.

மேலும் திராவிட கழகத்தை அளிக்க நினைக்கும் பா.ஜ.கவை எப்படி கூப்பிட முடியும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பேசிய தமிழிசை சவுந்திரராஜன், கருணாநிதி அனைவருடனும் பழகியிருக்கிறார். எனவே அவருக்காக கொண்டாடப்படும் வைர விழாவை கூட்டணி கட்சிகளுடன் மட்டும் கொண்டாடாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.

இதைதொடர்ந்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் திமுகவின் வைர விழா கருணாநிதிக்காக கொண்டாடப்படவில்லை என்றும், அரசியல் ஆதாரத்திற்காக நடத்தபடுகிறது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கருணாநிதியின் வைர விழாவை வைத்து பா.ஜ.க. விளம்பரம் தேட பார்ப்பதாகவும் அவர்களின் கனவுக்கு நான் உதவ மாட்டேன் எனவும் தெரிவித்தார்.

click me!