டெல்லியில் இருந்த படியே மாஸ் காட்டும் அண்ணாமலை.. புதிய மாவட்ட பார்வையாளர்களை நியமித்து அதிரடி..!

By vinoth kumar  |  First Published Apr 10, 2023, 6:44 AM IST

தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தார். அப்போது, பிரதமரை வரவேற்றபோதும்,  எந்த ஒரு நிகழ்ச்சிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. 


தருமபுரி, ராமநாதபுரம்,  செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தார். அப்போது, பிரதமரை வரவேற்றபோதும்,  எந்த ஒரு நிகழ்ச்சிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக பல்வேறு விதமான பேச்சுகள் எழுந்தன. குறிப்பாக அதிமுகவுடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் அண்ணாமலையை தேசிய தலைமை ஓரம் கட்டுகிறாதா என்ற கேள்வியும் எழுந்தது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னை வந்த மோடி..! வரவேற்க வராத அண்ணாமலை.? காரணம் என்ன.? எங்கே சென்றார் மாநில தலைவர்.?

ஆனால், அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெறுவதால் டெல்லியில் ரொம்ப பிசியாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டெல்லியில் இருந்தபடியே தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, ராமநாதபுரம், செங்கல்பட்டு தெற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை அண்ணாமலை நியமித்துள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். 

இதையும் படிங்க;-  ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!

மாவட்ட பார்வையாளர்கள்

* ராமநாதபுர மாவட்டம் -  கே.முரளீதரன்
* செங்கல்பட்டு தெற்கு - எம்.ரவி
* கிருஷ்ணகிரி கிழக்கு - கே.வெங்கடேசன்
* சேலம் மேற்கு - ஆர்.ஏ.வரதராஜன் 
* தருமபுரி- கே.முனிராஜ் ஆகியோர் நியமித்து தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!