மதுரை மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்கிய அதிமுக..! அதிர்ச்சியில் அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Sep 22, 2023, 9:53 AM IST

அதிமுக-பாஜக இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், மதுரையை மாவட்ட பாஜக துணைத்தலைவர், இளைஞர் அணி தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
 


அதிமுக- பாஜக மோதல்

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அறிஞர் அண்ணாவை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்ததாக கூறி கூட்டணியில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதனை அடுத்து இரு தரப்பிற்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

Latest Videos

undefined

அதே நேரத்தில், பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்கும் பணியானது தீவிரம் ஆகி வருகிறது. இந்தநிலையில்,  பா.ஜ.க.மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், பாஜக இளைஞர் அணி தலைவர் பாரி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர்.

அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்

அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்தவர்கள்,  தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு செல்லூர் ராஜூ வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துக்கொண்டவர்களின் வாகனங்களில் அதிமுக கொடியை செல்லூர் ராஜூ பொருத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, பாஜகவிற்கும் எங்களுக்கும் பிரச்னை உள்ளது. 

என யாராவது பேசி இருக்கிறோமா என கேள்வி எழுப்பினார். மாநில தலைவர் அண்ணாமலை அறிஞர் அண்ணாவைப்பற்றி சொன்ன விதம் தவறு என தான் கூறினோம். எங்களை நட்டா ஜி, அமித்ஷா ஜி,  மோடி ஜி, மதிக்கிறார்கள் அது போதும் என தெரிவித்தார். நாங்களும்  மோடிஜி தான் பிரதமராக வேண்டும் என சொல்கிறோம் என கூறினார். 

சனாதனம் அண்ணா காலத்தில் ஒழிக்கப்பட்டது

தொடர்ந்து பேசிய அவர், தம்பி உதயநிதி வரலாறு தெரியாமல் பேசுகிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு பிள்ளையாகவே உள்ளார். சனாதனம் அண்ணா பெரியார் காலத்திலேயே ஒழிக்கப்பட்டது. சீர்திருத்த திருமணங்களை நடத்தியவர் அண்ணா, உங்கள் கட்சியில் தலைவராக தாழ்த்தப்பட்டவரை அருந்தியரை நிறுத்த முடியுமா.? எனவும் கேள்வி எழுப்பினார். சிறுபான்மை ஓட்டை கவர வேண்டும் என்பதற்காக உதயநிதி பேசுவதாக குறிப்பிட்டவர், DMK என்றாலே - D டெங்கு M மலேரியா k கொரோனா என கடுமையாக செல்லூர் ராஜூ விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற திமிரா.. திமுகவினர் கொலைவெறித் தாக்குதலில் அதிமுக தொண்டர் பலி! கொதிக்கும் இபிஎஸ்.!

click me!