ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற திமிரா.. திமுகவினர் கொலைவெறித் தாக்குதலில் அதிமுக தொண்டர் பலி! கொதிக்கும் இபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published Sep 22, 2023, 8:01 AM IST

ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றோம் என்ற மமதையில் திமுகவினரின் அராஜகங்கள், அட்டூழியங்கள், வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதையும், நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.


திமுக-வினர் சரமாரியாகத் தாக்கியதால் அதிமுக தொண்டர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும்; ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றோம் என்ற மமதையில் திமுகவினரின் அராஜகங்கள், அட்டூழியங்கள், வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதையும், நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கொடநாடு வழக்கு.. நீதிமன்றம் படியேறிய இபிஎஸ்.. உதயநிதிக்கு வாய்ப்பூட்டு போட்ட நீதிபதி

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022-ல் நடைபெற்ற தேர்தலில் கழக வேட்பாளரின் வெற்றிக்கு, நகர 2-ஆவது வார்டு கழக துணைச் செயலாளர் ஊ.ஹேமநாதன் மற்றும் அவருடைய சகோதரர் ஊ.கார்த்திகேயன் உள்ளிட்டோர் அரும்பாடுபட்டுள்ளனர்.
இத்தேர்தலில் தோல்வியடைந்த திமுக-வினர், கார்த்திகேயன் மீது கடந்த ஆண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால், அவர் 3 மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாகத் தெரிய வருகிறது. 

இந்நிலையில், மறைமலைநகர் நகரில் கடந்த 18.9.2023 அன்று உள்ளூர் கோயில் திருவிழா ஊர்வலத்தின்போது, தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த கார்த்திகேயன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் திமுகவினர் பாட்டாசுகளை வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட நிலையில், கார்த்திகேயன் அவர்களை திமுக-வினர் சரமாரியாகத் தாக்கியதால், பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இதையும் படிங்க;-  28 மாசமா தாய்மார்களை ஏங்க வச்சிட்டு! இப்ப ரூ.1000 கொடுத்த ஓட்டு போட்டுவாங்களா! உங்க நப்பாச பலிக்காது முதல்வரே!

அன்புச் சகோதரர் கார்த்திகேயன் அவர்களை இழந்து வாடும் அவரது சகோதரரும், மறைமலைநகர் நகர 2-வது வார்டு கழக துணைச் செயலாளருமான ஹேமநாதன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அண்ணாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். கழக உடன்பிறப்பு கார்த்திகேயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

click me!