உங்களுக்கு அடிபணிந்து கிடக்க இது தமிழ்நாடு இல்ல!”  எடப்படியை எக்கச்சக்க டென்ஷனில் புலம்பவிட்ட குமாரசாமி!

 
Published : May 16, 2018, 02:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
உங்களுக்கு அடிபணிந்து கிடக்க இது தமிழ்நாடு இல்ல!”  எடப்படியை எக்கச்சக்க டென்ஷனில் புலம்பவிட்ட குமாரசாமி!

சுருக்கம்

BJP offered JD MLAs Rs 100 crore alleges Kumaraswamy

இது ஒன்றும் தமிழ்நாடு அல்ல, உங்களுக்கு அடிபணிந்து கிடக்க, மிரட்டினால் எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியும் என அமித்ஷா மற்றும் மோடியை மிரட்டுவதாக நினைத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை புலம்பவிட்டுள்ளார் குமாரசாமி. 

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 104 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதையடுத்து குமாரசாமி முதல்வராவதற்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்தது.  அதிர்ச்சிகுள்ளான பிஜேபி, மஜத தலைமைக்கு மிரட்டல் விட தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று குமாராசாமியை பாஜக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்துப் பேசினார். பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் எம்.ஏ.க்கள் கூட்டத்திற்கு முன்னதாக இதனை மறுத்துள்ள குமாரசாமி, " நாங்கள் ஏற்கனவே காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்துள்ளோம். எனவே பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், தேர்தலுக்கு முன்பு காங்கிரசை மண்ணை கவ்வ வைக்க  சில தொகுதிகள் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு பாஜக ஆதரவு கொடுத்ததை அக்கட்சியின் டெல்லி தலைமை குமாரசாமிக்கு சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த உங்கள் தேர்தல் செலவையும் நாங்கள் கவனித்துக்கொண்டோம் ஆனால் இப்போது நீங்கள் எங்களுக்கு ஆதரவை தருவதை விட்டுவிட்டு இப்படி காங்கிரசை கட்டிக்கொண்டு அழுவது எதற்காக? என  மிரட்டல் விடுத்ததோடு ரகசிய உடன்படிக்கையை மீறக்கூடாது என்று கூறியிருக்கிறது. 

அதில் பாஜக, காங்கிரஸ் கட்சியைவிட குறைவான தொகுதிகளை பெற்றிருந்தால் அப்போது ஆட்சி அமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் உதவும் என்றுதான் கூறியிருக்கிறார்கள். அப்போது துணை முதல்வராகத்தான் ஏற்றுக்கொள்வோம் என்றும் பாஜக ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார்களாம்.

ஆனால், இப்போது காங்கிரஸ் குமாரசாமிக்கு முதல் அமைச்சர் பதவியே கொடுத்துள்ளது. இந்நிலையில் குமாரசாமி காங்கிரஸ் கட்சியோடு உடன்பட்டு ஆட்சி அமைக்க உள்ளதால்,  கடுப்பான பாஜக டெல்லி தலைமை, காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை தங்களது பக்கம் இழுக்கத்தொடங்கியுள்ளது. இதற்க்கு முன்பு  சில மிரட்டல்களை குமாரசாமிக்கு கொடுக்க, உங்கள் வேலையை என்னிடம் காட்ட வேண்டாம். இது ஒன்றும் தமிழ்நாடு அல்ல, உங்களுக்கு அடிபணிந்து கிடக்க, மிரட்டினால் எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியும் என மோடி அமித்ஷாவுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து தாக்கியுள்ளார் குமாரசாமி. 

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!