அப்போ உப்பு சேத்துக்கல...! இப்போ உப்பு சேர்த்து சாப்புடுறது தப்பா? ஹெச்.ராஜாவின் முகம் சுளிக்க வைக்கும் பேச்சு!

Asianet News Tamil  
Published : Feb 09, 2018, 04:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
அப்போ உப்பு சேத்துக்கல...! இப்போ உப்பு சேர்த்து சாப்புடுறது தப்பா? ஹெச்.ராஜாவின் முகம் சுளிக்க வைக்கும் பேச்சு!

சுருக்கம்

BJP National Secretary H.Raja Pressmeet

ஹேராம் படம் வெளியாகும்போது இந்துக்கள் உப்பு சேர்த்துக்கவில்லை என்றும், இப்போது உப்பு சேர்த்து சாப்பிடுறது தவறா என்றும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சையாக பேசியதற்காக அவர் ஆண்டாள் கோயிலில் வந்த மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூரில் சடகோப ராமானுஜ ஜீயர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார். அதன் பின்பு இன்று மதியம் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக உண்ணாவிரதம் இருந்த ஜீயரை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா ஜீயரை நேரில் சந்தித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜீயரிடம் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் என வலியுறுதியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  வைரமுத்து ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை மேற்கோள் காட்டியது 100 சதவீதம் ஆதாரமற்றது எனவும், அப்படி ஒரு கருத்தே இல்லை எனவும் கூறினார். இதனை தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயில் நடந்த தீ விபத்து ஒரு சதி எனவும், அதற்கான தடயம் அளிக்கப்படுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆண்டாள் குறித்து அவதூறான வசனங்களை கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் இடம் பெற்றிருந்த போது எழாத கண்டணம் வைரமுத்துவுக்கு எழ காரணம் ஏன்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அப்போ சோத்துல உப்பு சேத்த்துக்கல...! இப்ப உப்பு சேர்த்து சாப்புடுறது தப்பு என்கிறீர்களா? என கூறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு விஜேந்திரர் எழுந்திருக்கவில்லை என்ற கேள்விக்கு செம்மொழி மாநாட்டில் கலைஞர் எழுந்து நின்றாரா என கேள்வி எழுப்பிவிட்டு ஆவேசகமாக சென்று விட்டார்

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!