தன்னுடைய பெயரை ராஜா ஹரிஹர ஷர்மா என்று அவதூறு பரப்பப்புவோர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டை புகைப்பட ஆதாரத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி குறித்தும் டிஜிட்டல் இந்தியா குறித்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
undefined
இதற்கு பாஜகவினர் பலரும் கடும் கண்டங்களை தெரிவித்து வந்தனர். அதில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒரு படி மேலே போய் விஜயின் பெயரை ஜோசப் விஜய் என மதத்தை முன்னிருத்தி சுட்டி காண்பித்திருந்தார்.
இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்வலை கிளம்பியது. இதையடுத்து ஹெச். ராஜாவின் உண்மையான பெயர் ராஜா ஹரிஹர ஷர்மா என அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், தற்போது ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தனது வோட்டர் ஐடியை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அதில், அவரது பெயர் ஹெச்.ராஜா என குறிப்பிடப்பட்டுள்ளது.