வாயால் கெடும் பி.ஜே.பி... முரட்டு முரளிதர்ராவும், முறைக்கும் கூட்டணி கட்சிகளும்..!

By Vishnu PriyaFirst Published May 18, 2019, 2:27 PM IST
Highlights

விதியோ அல்லது சதியோ, கடந்த சில வாரங்களாகவே தன் வாயினாலேயே தன்னை அதிகம் கெடுத்துக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி. ரேடார் மற்றும் எஸ்.எல்.ஆர். கேமெரா குறித்து மோடி சொன்ன வார்த்தைகள் அவரைத் தாறுமாறாக பதம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

விதியோ அல்லது சதியோ, கடந்த சில வாரங்களாகவே தன் வாயினாலேயே தன்னை அதிகம் கெடுத்துக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி. ரேடார் மற்றும் எஸ்.எல்.ஆர். கேமெரா குறித்து மோடி சொன்ன வார்த்தைகள் அவரைத் தாறுமாறாக பதம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் முரளிதர் ராவ் உதிர்த்திருக்கும் முரட்டு வார்த்தைகளால் பி.ஜே.பி. கூட்டணி கட்சியினர் கடும் எரிச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகியுள்ளனர். விவகாரம் இதுதான்.... பி.ஜே.பி.யின் தேசிய செயலர் முரளிதர் ராவ். அவர் தனது சமீபத்திய பேட்டியில் “மாயாவதி, அகிலேஷ் போன்றவர்கள் மாநில அரசியலுக்குதான் சரிப்பட்டு வருவார்கள். தேசிய அரசியலுக்கு அவர்கள் லாயக்கில்லை. 

லோக்சபா தேர்தலில், பி.ஜே.பி. மட்டுமே 280 இடங்களில் வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி முந்நூறுக்கும் மேலான இடங்களில் வென்று, ஆட்சியை தக்க வைக்கும்.” என்று கூறியிருந்தார் கெத்தாக. இதைப் பார்த்து எதிர்கட்சியினர் கடுப்பானார்களோ இல்லையோ, பி.ஜே.பி.யின் கூட்டணி கட்சியினர் கடுமையாக எரிச்சலாகிவிட்டனர். 

காரணம்?...’தேசத்திலிருக்கும் மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் பி.ஜே.பி. மட்டுமே இருநூற்று எண்பது பிடித்துவிடுமாம், பிறகு எல்லா மாநிலத்தில் இருக்கும் இவர்களது கூட்டணி கட்சியினரான எல்லாரும் சேர்ந்து மொத்தமாக இருபதோ அல்லது அதைவிட சில இடங்கள்  மட்டுமே கூடுதலாக பிடிப்போமா? இவ்வளவுதான் நமது கெப்பாசிட்டியா, இவ்வளவுதான் நமது திறனா? என்ன நினைச்சுட்டிருக்கார் முரளிதர் ராவ்? மிக மோசகமாக பி.ஜே.பி. இந்த தேர்தலில் தோற்கப்போகிறது என்று தேர்தலுக்கு முன் பேசப்பட்ட நிலையில், கெஞ்சிக் கூத்தாடியும் மிரட்டியும் நாடு முழுவதும் பல கட்சிகளை கூட்டணியில் சேர்த்தார்கள். 

இப்போதும் பி.ஜே.பி.க்கு எதிரான அலையே வீசிக் கொண்டிருக்கும் நிலையில், முரளிதர் ராவ் இப்படி முரட்டுத்தனமாக பேசியிருப்பது எரிச்சலை தருகிறது. இப்போதே இப்படியென்றால், இவர்களை ஆதரித்து ஆட்சியில் மீண்டும் உட்கார வைத்தால் எந்தளவுக்கு திமிராக பேசுவார்கள். எனவே தேர்தல் முடிவுகளுக்கு பின் நாம் யோசித்து முடிவெடுப்பது நல்லது.” என்று பொங்கியிருக்கின்றனர். பி.ஜே.பி.யும் வாயால் கெடும்!

click me!