மோடிக்கு எதிராக பேசுறவங்கள உயிரோடு எரிக்கணும் ! வெறிப்பேச்சு பேசிய பாஜக அமைச்சர் !!

Published : Jan 14, 2020, 08:03 AM IST
மோடிக்கு எதிராக பேசுறவங்கள உயிரோடு எரிக்கணும் !  வெறிப்பேச்சு பேசிய பாஜக அமைச்சர் !!

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதமைச்சர்  ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராகப் பேசுபவர்களை உயிரோடுஎரிக்க வேண்டும்” என உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  

உத்தரப்பிரதேசத்தின் அலிகார் நகரத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்துணைத் முதலமைச்சர்  கேசவ் பிரசாத்மவுரியா, தொழிலாளர் துறை அமைச்சர் ரகுராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போதுதான் பேசிய அமைச்சர் ரகுராஜ் சிங், “சிஏஏ-வைஎதிர்ப்பவர்கள் வெறும் 1 சதவிகிதம் பேர்தான். இந்தியாவில்தங்கியிருந்து, எங்கள் வரிகளைச் சாப்பிட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிராக ‘முர்தாபாத்’ என்று கோஷங்களை எழுப்புகிறீர்கள்.  நீங்கள் எல்லாம் பொடா சட்டத்தின் கீழ் சிறைக்குச் செல்லப் போகிறீர்கள் என மிரட்டல் விடுத்தார்.

உங்கள்எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள். முதலமைச்சர்  யோகிக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராகப் பேசினால், நீங்கள் எல்லோரும் உயிருடன் எரிக்கப்படுவீர்கள்” என்று அமைச்சர் ரகுராஜ் சிங் கொலை  மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், “அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும், “பாதுகாப்புப் படையினரிடம் அதிகப்படியான உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளது” என்றும் ரகுராஜ் சிங் பயமுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!