ஜெயிலுக்கு போனாருல… அது தான் அவருக்கு மூளை குழம்பிப் போச்சு !! சிதம்பரத்தை கடுப்பாக்கிய எச்.ராஜா !!

Selvanayagam P   | others
Published : Jan 14, 2020, 07:46 AM IST
ஜெயிலுக்கு போனாருல… அது தான் அவருக்கு மூளை குழம்பிப் போச்சு !! சிதம்பரத்தை கடுப்பாக்கிய  எச்.ராஜா !!

சுருக்கம்

'106 நாட்கள் திஹார்  சிறையிலிருந்தால்  முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு, மூளை குழம்பி விட்டது 'என பாஜக  தேசிய செயலர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் 106 நாட்கள் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளிவந்தது முதல்  மோடி ஆட்சிக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். நாள் தோறும் அறிக்கைகள், பிரஸ் மீட், டுவிட்டர் என  பாஜகவை தெறிக்கவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர், எச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , தன்னுடைய ஊழலை மறைக்க, கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற உள் நோக்கம் இருப்பதால்தான், ப.சிதம்பரம் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, பிரதமர் விவாதிக்க வேண்டும் என்று கூறுகிறார் என குறிப்பிட்டார். 106 நாள் சிறையிலிருந்த சிதம்பரத்திற்கு மூளை குழம்பியுள்ளது என அதிரடியாக தெரிவித்தார்.

.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி இயற்கைக்கு மாறான கூட்டணி. இவர்களின் கூட்டணி அதுவாகவே வீழும். தமிழகத்தை மையமாக வைத்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை, தமிழக அரசு மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணை போகிறாரா அல்லது அமைதியாக இருந்து அனுமதிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நான் இந்தியன் இல்லை என்று கூறுபவர்கள் இந்தியாவை விட்டு வெளியே போய் விடுங்கள் என்றும் எச்,ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்