பி.ஜே.பி. என்பது ஒரு மைனஸ் கட்சிதான்...! ஓ.பன்னீர்செல்வம்..!

Published : Apr 07, 2019, 04:40 PM ISTUpdated : Apr 07, 2019, 04:41 PM IST
பி.ஜே.பி. என்பது ஒரு மைனஸ் கட்சிதான்...! ஓ.பன்னீர்செல்வம்..!

சுருக்கம்

அ.தி.மு.க. கூட்டணியில் நான்கு முக்கிய கட்சிகள் இருக்கின்றன என்றாலும் கூட, பி.ஜே.பி. என்பது ஒரு மைனஸ் கட்சிதான். தமிழகம் முழுக்கவே பி.ஜே.பி.க்கு எதிரான மனநிலைதான் மக்கள் மத்தியில் இருக்குது: ப.சிதம்பரம். (இருந்துட்டு போவட்டும், அதனால தோத்துப் போயிடுவாங்களா என்ன? நீங்கதான் கத்துக் கொடுத்திருக்கீங்களே தல... ரீ கவுண்ட்டிங் வித்தை! அதை அவங்களும் யூஸ் பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?)

* பிரதமர் மோடியின் அரசை கடுமையாய் விமர்சித்துவிட்டு இப்போது மீண்டும் அவருக்கே ஓட்டுக் கேட்டு வருகிறார் தம்பிதுரை. இதுதான் அவரோட லட்சணம்: ஸ்டாலின். (விடுங்க தளபதி, வைகோ உங்களையெல்லாம் திட்டுன திட்டை விடவா தம்பிதுரை அந்த மோடியண்ணனை திட்டிட்டார்? அட இன்னைக்கு வைகோ உங்களை புகழ்றதைவிட அதிகமாவா தம்பிதுரை மோடியை புகழ்ந்துட்டாரு? எல்லாம் அரசியல்ல இருக்குறதுதான் பாஸு)

* கட்சி பதவியில் உள்ளவர்களுக்கு தேர்தலில் சீட்டும்! தேர்தலில் சீட் வாங்கியவர்களுக்கு கட்சியில் பதவியும் கொடுப்பது சரியல்ல. இரண்டையும் சிலரே பெறுகிறார்கள் என்றால் தகுதியுள்ள மற்றவர்களின் நிலை?: பீட்டர் அல்போன்ஸ். (சரி சரி புரியுது. த.மா.கா.வுல இருந்து தாவி வந்த உங்களை ஒண்ணுமே இல்லாம உட்கார வெச்சிருக்காங்க, அதானே. அது சரி, ஒரு காலத்துல நீங்களும் பதவிகள்ள கோலோச்சுனீங்களே, அப்ப  இந்த ஜனநாயக கருத்தெல்லாம் உங்களுக்கு வராம போனது ஏன் மிஸ்டர். பீட்டரு?)

* தஞ்சாவூரில் முதல்வர் இ.பி.எஸ். பிரசாரத்தில் அவரோடு பயணித்தவன் எனும் முறையில் சொல்கிறேன். அவருக்கு நல்ல கூட்டம் கூடுகிறது. அவரது மக்கள் செல்வாக்குக்கு முன் தினகரனெல்லாம் அவர் பக்கத்தில் நிற்க முடியாது. 40க்கு 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்லும்: நவநீத கிருஷ்ணன். 
(அண்ணன் நவநீதகிருஷ்ணனுக்கு மறுபடியும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்.............)

* அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமைதான். இதை என் போன்றவர்களால் தான் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.: ஓ.பன்னீர்செல்வம். (அப்ப, அந்த துணைமுதல்வர் பதவி, கழக ஒருங்கிணைப்பாளர் பதவி, மகனுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிற வேட்பாளர் சீட் எல்லாத்தையும் ராஜினாமா பண்ணிட்டு பெருமை மிகு தொண்டனா மட்டுமே கட்சியில இருக்குறது)

* அ.தி.மு.க. கூட்டணியில் நான்கு முக்கிய கட்சிகள் இருக்கின்றன என்றாலும் கூட, பி.ஜே.பி. என்பது ஒரு மைனஸ் கட்சிதான். தமிழகம் முழுக்கவே பி.ஜே.பி.க்கு எதிரான மனநிலைதான் மக்கள் மத்தியில் இருக்குது: ப.சிதம்பரம். (இருந்துட்டு போவட்டும், அதனால தோத்துப் போயிடுவாங்களா என்ன? நீங்கதான் கத்துக் கொடுத்திருக்கீங்களே தல... ரீ கவுண்ட்டிங் வித்தை! அதை அவங்களும் யூஸ் பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?)

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு