
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது பாஜக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உத்திர பிரதேசத்தை முன்னேற்றும் வகையில் அரசு செயல்படும் என்றும் ஆட்சியாளர்கள் நேர்மையாக நடந்து கொள்வது உறுதி செய்யப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர் அமைச்சர்கள் அதிகாரிகள் தங்கள் சொத்து விவர பட்டியலை வெளியிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது மோடியைப் போலவே பாஜகவின் தனக்கென தனி செல்வாக்கைத் உருவாக்கி வைத்துள்ளார் யோகி ஆதித்யநாத். அவரின் எளிமையும் நேர்மையும் மக்கள் மத்தியில் பாராட்டையும் நன் மதிப்பையும் பெற்றுத் தந்துள்ளது. அதனால் இரண்டாவது முறையாக இவர் உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை பெற்றுள்ளார். எதையும் தயங்காமல் அதிரடியாக முடிவெடுக்கும் ஆற்றல் பெற்றவர் யோகி என்பதை அம்மாநில மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அரசியல் ரீதியாகவும் சரி நிர்வாக ரீதியாகவும் சரி அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில்தான் அம்மாநிலத்தில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளைபுல்டோசர் வைத்து தகர்க்கும் அதிரடி நடவடிக்கையை யோகி அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் தான் மாநில அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை தங்களது சொத்து விவர பட்டியலை வெளியிட வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மக்கள் பிரதிநிதிகளில் நேர்மையும் தூய்மையும் அவசியம், பதவியேற்ற மூன்று மாத காலத்திற்குள் அனைத்து அமைச்சர்களும் தங்களது அசையும் அசையா சொத்துக்களின் விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்ந விவரங்களை வெளியிட வேண்டும். அந்த விவரங்கள் நேர்மையாக இருக்கவேண்டும் என்றும், அரசு ஊழியர்களும் பொதுமக்களும் அதை அறிந்துகொள்ள வரை அது இணையத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேபோல் அரசு பணிகளில் அமைச்சர்களின் குடும்பத்தில் தலையிடாமல் இருக்க வேண்டுமெனவும், பிறர்க்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். அரசு திட்டங்கள் சரியான நேரத்தில் திறம்பட செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். யோகியின் இந்த உத்தரவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.