சுதந்திரம் பெற்றபோதே இஸ்லாமியர்களை பாகிஸ்தான் விரட்டியிருக்க வேண்டும்...!! பாஜக அமைச்சர் திமிர் பேச்சு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 21, 2020, 1:34 PM IST
Highlights

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு முகம்மது அலி ஜின்னா இஸ்லாமிய நாட்டுக்காக அழுத்தம் கொடுத்து வந்தார்,   அப்போதே நமது முன்னோர்கள் செய்த தவறுக்குதான் இப்போது நாம் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் .
 

நாடு சுதந்திரம் அடைந்தபோதே முஸ்லிம்களை பாகிஸ்தான் அனுப்பி இருக்க வேண்டுமென மத்திய அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் அதன் அமைச்சர்கள் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை இந்து அல்லாதவர்கள் மீது வெறுப்பை உமிழும் அளவில் கருத்துக்களைக் பேசி வருகின்றனர் இந்தியா இந்துக்களுக்கே என்னும் வகையில் அவர்களின் வெறுப்புப் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன .  இது  போன்ற பேச்சுக்களால் பாஜகவின் மீது மக்களுக்கு இனம்புரியாத வெறுப்பு ஏற்பட்டு வருகிறது . 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும்  நிலையில் பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்கின் கருத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது .  பீகார் மாநிலம் கயாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கிரிராஜ் சிங் பேசியதன் விவரம்:- இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு முகம்மது அலி ஜின்னா இஸ்லாமிய நாட்டுக்காக அழுத்தம் கொடுத்து வந்தார்,   அப்போதே நமது முன்னோர்கள் செய்த தவறுக்குதான் இப்போது நாம் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் . 

அதாவது,  நாடு சுதந்திரம் அடைந்தபோதே முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டு இந்துக்களை பெற்றிருக்க வேண்டும்,  பிரதமர் மோடி குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தகவல்களை தெளிவாக பேசி இருக்கிறார் ,  பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள இந்து அகதிகளுக்கு இங்கு இடமில்லை எனில் அவர்கள் எங்கே போவார்கள் என்று கேள்வி எழுப்பினார் . இந்திய சுதந்திரத்தின்போதே  இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டுமென கிரிராஜ் சிங் இந்துக்களுக்கு ஆதரவாகவும் ,  முஸ்லிம்களுக்கு எதிராகவும் பகிரங்கமாக கூறியிருப்பது நாட்டு மக்கள் மத்தியில்  மிகுந்த கண்டனத்தை பெற்றுவருவது குறிப்பிடதக்கது.  
 

click me!