கொஞ்சம், கொஞ்சமாக பலம் குறையும்  பாஜக ….. தனிப் பெரும்பான்மையை இழக்கும் ஆபத்து !!  ஒரு இடம் குறைஞ்சால் கூட அவுட்….

Asianet News Tamil  
Published : May 22, 2018, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
கொஞ்சம், கொஞ்சமாக பலம் குறையும்  பாஜக ….. தனிப் பெரும்பான்மையை இழக்கும் ஆபத்து !!  ஒரு இடம் குறைஞ்சால் கூட அவுட்….

சுருக்கம்

BJP members count will be decresed in parliment

நாடாளுமன்ற மக்களவையில், பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை, 282-இல் இருந்து 272 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் இன்னும் ஓரிடம் குறைந்தால் கூட அந்த கட்சி, தனிப்பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இடைத்தேர்தல்களில் கிடைத்ததோல்வி மற்றும் எம்.பி.யாக இருந்தவர்களை மாநில முதலமைச்சர்கள்  மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆக்கியது உள்ளிட்ட பல காரணங்களால் அந்த கட்சிக்கான எம்.பி.க்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு வதோதரா (குஜராத்) ஷாதோல் (மத்திய பிரதேசம்), லக்கிம்பூர் (அசாம்) ஆகிய 3 தொகுதிகளை மட்டுமே பாஜக தக்க வைத்துக் கொண்டது. ஆனால், 6 எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர், பூல்பூர் ஆகியதொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியிடமும், பீட்(மத்தியப் பிரதேசம்), குர்தாஸ்பூர் (பஞ் சாப்), ஆல்வார், அஜ்மீர் (ராஜஸ்தான்) ஆகிய தொகுதிகளில் காங்கிரசிடமும் பாஜக இழந்தது.

இந்த 6 இடங்கள்தவிர, நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீதுஊழல் புகார் கூறியதற்காக பாஜக எம்.பி.யான கீர்த்தி ஆசாத்தை, பாஜக-வே சஸ் பெண்டு செய்தது. பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவும் தொடர்ந்து மோடி - அமித்ஷா தலைமையை எதிர்த்து வருகின்றார்.

இவற்றுடன் கர்நாடகத்தில் எம்எல்ஏ தேர்தலில் வென்றதைத் தொடர்ந்து எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் தங்களின் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ததால், மக்களவையில் பாஜக-வின் பலம் 272 ஆக குறைந்துள்ளது.

இதனால் பாஜக ஆட்சிக்கு தற்போது எந்த ஆபத்தில்லை என்றாலும், இன்னும் ஒரு இடம் குறைந்தால் தனிப்பெரும்பான்மையை அந்த கட்சி இழக்கும்.மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நான்கு எம்.பி. தொகுதிகளுக்கு மே 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஏதாவது வெற்றி கிடைத்தால் பாஜக-வின் பலம் அதிகரிக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!