பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான பெண் நிர்வாகி சவுதாமணி கைது.. என்ன காரணம் தெரியுமா?

Published : Mar 06, 2024, 12:42 PM ISTUpdated : Mar 06, 2024, 01:43 PM IST
பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான பெண் நிர்வாகி சவுதாமணி கைது.. என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்ற பிறகு ஆளுங்கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்கள் பதிவிடும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக பாஜக நிர்வாகிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

பாஜக ஊடகப் பிரிவு செயலாளரான சவுதாமணி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பிய புகாரில் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் பாஜக நிர்வாகியான சவுதாமணி. இவர் பிரபல செய்தி வாசிப்பாளராக வலம் வந்தவர். கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜக ஊடகப் பிரிவு செயலாளராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 

இதையும் படிங்க: 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை... குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கிடுக- அன்புமணி

இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான சவுதாமணியை திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 6 மணியளவில் சவுதாமணியை சென்னையில் கைது செய்த திருச்சி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் குழந்தைகளை அவதூறாக பதிவிட்டதே சவுதாம கைதுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க:  மக்களவை தேர்தலில் இவங்களுக்கு தான் முன்னுரிமை.. உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை!

இவர் மீது ஏற்கனவே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் வதந்திகளை பரப்பியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சவுதாமணியை கைது செய்யப்பட்டு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி