மக்களவை தேர்தலில் இவங்களுக்கு தான் முன்னுரிமை.. உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை!

By vinoth kumar  |  First Published Mar 6, 2024, 12:30 PM IST

தமிழ்நாட்டின் அரசியல் சூழல், மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பப்பட்டியல் உள்ளிட்டவற்றை குறித்து டெல்லி பாஜக தலைமையிடம் இன்று கொடுக்க போகிறோம். 


பாஜக தேசிய தலைமை வெளியிடும்  2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டு வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறலாம் என அண்ணாமலை கூறியுள்ளார். 

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. தென்சென்னை தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று இரவு 9 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இந்த பட்டியலை எடுத்துக்கொண்டு மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய அமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இன்று டெல்லி செல்கின்றனர். 

இந்நிலையில், தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று டெல்லி செல்கிறோம்.  தமிழ்நாட்டின் அரசியல் சூழல், மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பப்பட்டியல் உள்ளிட்டவற்றை குறித்து டெல்லி பாஜக தலைமையிடம் இன்று கொடுக்க போகிறோம். 

தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பாஜக தலைவர்கள் சென்று தொண்டர்களின் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிகளவில் பெண் வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள், தொகுதிகள் உள்ளிட்டவற்றை தேசிய தலைமை முடிவு செய்யும்.  கூட்டணி மற்றும் வேட்பாளர் பட்டியல் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்றார். பாஜக தேசிய தலைமை வெளியிடும்  2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டு வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறலாம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

click me!