தமிழக பாஜகவின் வேட்பாளர் லிஸ்டோடு டெல்லிக்கு பறந்த அண்ணாமலை, எல். முருகன்- பட்டியலில் இடம் பெற போவது யார்.?

By Ajmal Khan  |  First Published Mar 6, 2024, 11:52 AM IST

நாடாளுமன்ற தேர்தல் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளனர். 


பாஜக வேட்பாளர் பட்டியல்

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கபடவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாஜக சார்பாக போட்டியிடுபவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனையடுத்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்னும் சில தினங்களில் வெளியிடவுள்ளது. 

Tap to resize

Latest Videos

 

கூட்டணி கட்சிக்கு எந்த தொகுதி.?

எனவே தமிழகத்தில் இருந்து பாஜக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த வகையில் இன்னும் பாஜகவின் கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையில், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தயார் செய்துள்ளது. அந்த வகையில், தங்களது கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர். ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டவர்களுக்கு பாஜக சார்பாக தொகுதிகள் வழங்கப்படவுள்ளது.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்றவர்கள் தாமரை சின்னத்தில் போட்யிடவுள்ளனர். 

வேட்பாளர் பட்டியலோடு டெல்லிக்கு சென்ற பாஜக குழு

அதே நேரத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், மத்திய சென்னை, தென்காசி,காரைக்குடி, தூத்துக்குடி,நெல்லை உள்ளிட்ட 10 தொகுதிகளின் பாஜக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலோடு தமிழக பா.ஜ்.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், மூத்த தலைவர்கள் எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் மேலிட பார்வையாளர்கள் ஆகியோர்கள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். டெல்லியில் இந்த பட்டியலை தேசிய தலைமை இறுதி செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.!அதிர்ச்சியில் ஸ்டாலின்- உற்சாகத்தில் இபிஎஸ்

click me!