
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் போது மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணிடம் பாஜக முகவர் கிரிராஜன், ஹிஜாப்பை அகற்றும்படி வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து கிரிராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கனிமொழி உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் கிரிராஜன மதுரை போலீஸார் கைது செய்தனர். அவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “'நமது நாடு மதச்சார்பற்ற நாடு; ஹிஜாப் அவரது உரிமை' என்று மதுரை சம்பவம் குறித்து தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்..
இந்நிலையில் பாஜகவினர் தகராறில் ஈடுபட்ட 8 வது வார்டில் திமுக நகரச் செயலாளர் யாசீன் போட்டியிட்ட நிலையில் அவர் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டெபாசிட் இழந்தார். அதிமுக இங்கு இரண்டாம் இடம் பிடித்துள்ளது..