ஆரம்பமே அடி தூள் !! வெளுத்து வாங்கும் பாஜக !! பின்னடைவைச் சந்திக்கும் காங்கிரஸ்!!

Published : May 23, 2019, 08:22 AM IST
ஆரம்பமே அடி தூள் !! வெளுத்து வாங்கும் பாஜக !! பின்னடைவைச் சந்திக்கும் காங்கிரஸ்!!

சுருக்கம்

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே  பாஜக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.  

17 ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் 67.1 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிகபட்சமாக பதிவான வாக்குகள் இதுதான். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது.


 
முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மேலும் விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் பின்னர் எண்ணப்பட உள்ளன. 
இந்நிலையில் முதல் கட்ட தகவல்படி வட மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.  கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில்  பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

தற்போது வந்துள்ள தகவல்படி  பாஜக 71 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இது தொடர்ந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!
இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!