காங்கிரசை ஓரங்கட்டி  தற்போது பாஜக முன்னிலை…. இழுபறி…பரபரப்பு….

Asianet News Tamil  
Published : May 15, 2018, 08:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
காங்கிரசை ஓரங்கட்டி  தற்போது பாஜக முன்னிலை…. இழுபறி…பரபரப்பு….

சுருக்கம்

BJP Leading in karnataka

வாக்கு எண்ணிகையில் முதலில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரசை  பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை  காலை 8 மணிக்குத் தொடங்கியது.

இதில் தொடக்கத்தில  காங்கிரஸ் கட்சி சற்று முன்னிலையில் இருந்தது ,ஆனாலும் இழுபறி நீடித்து வந்தது, இந்நிலையில் தற்போது  காங்கிரஸ் கட்சியை  ஓரம் கட்டி தற்போது பாஜக முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சியைவிட 5 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.  அதே  நேரத்தில் முதலமைச்சர் சித்த ராமையா போட்டியிட்ட பதாமி மற்றும் சாமூண்டீஸ்வரி தொகுதிகளில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். குமாரசாமி மற்றும் எடியூரப்பா ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு பின்னால் சகுனி ஆட்டம்..? ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஸ்லீப்பர் செல்..! அதிர வைக்கும் மச்சான் ஜோஸ் மார்ட்டின்..!
மாணவியைச் சிதைத்த காமக் கொடூரர்கள்: புகாரை மதிக்காத காவல்துறை... மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!