பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

Published : Feb 11, 2021, 09:47 PM ISTUpdated : Feb 11, 2021, 09:49 PM IST
பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

சுருக்கம்

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.  

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பற்றி பாஜக பிரமுகர் கல்யாணராமன் அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. அவருக்கு எதிராக இஸ்லாமிர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸார், கல்யாணராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.

 

இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாட்ட ஆட்சியர் ராசாமணிக்கு பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ராசாமணி, கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!