
டிடிவி.தினகரனை மனதராப் பாராட்டுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாருமாறு தமிழக அரசியல் சூழலில் ஹெச்.ராஜாவும் தன்பங்குக்கு சூட்டைக் கிளப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், " அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிளவு வெளிப்படையாகவே தெரிகிறது. அதனை சரிசெய்யவே தற்போது இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு பா.ஜ.க. பொறுப்பல்ல. அரசு இயந்திரத்தை பா.ஜ.க.தலைமையிலான மத்திய அரசு ஆட்டுவிப்பதாகக் கூறுவது உள்நோக்கம் கற்பிக்கும் செயல்."
தமிழக அரசின் செயல்பாடுகளில் பா.ஜ.க.வின் தலையீடு இருப்பதாக பன்னீர்செல்வம் பேசினாரா, இல்லை அமைச்சர்கள் பேசினார்களா?. இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் பணப்பட்டுவாடா செய்தது ஆதாரங்களுடன் வெளியாகி உள்ளது. யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை டிடிவி மிகத் தெளிவாக கணக்கு வைத்துள்ளார். கணக்கை சரியாக கையாண்டதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்." இவ்வாறாக ஹெச்.ராஜா குமுறியிருக்கிறார்.