பாக். ‘வின்’ பண்ணியதை கொண்டாடினால் ஜெயிலில் களி தான்… பாஜக தலைவர் சர்ச்சை

Published : Oct 26, 2021, 04:54 PM IST
பாக். ‘வின்’ பண்ணியதை கொண்டாடினால் ஜெயிலில் களி தான்… பாஜக தலைவர் சர்ச்சை

சுருக்கம்

கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்றதை கொண்டாடினால் அவர்கள் ஜெயிலில் தள்ளப்படுவார்கள் என்று பாஜக தலைவர் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்றதை கொண்டாடினால் அவர்கள் ஜெயிலில் தள்ளப்படுவார்கள் என்று பாஜக தலைவர் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச டி 20 உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் முதல் முறையாக வீழ்ந்தது. பாக். அணியின் வெற்றியை காஷ்மீர் மருத்துவக் கல்லூரியில் விடுதி மாணவர்கள் கொண்டாடியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வெளியானது.

இந் நிலையில், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் அவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்று காஷ்மீர் பாஜக தலைவர் ரவிந்தர் ரைனா அதிரடியாக கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: இந்த விவகாரத்தில் தாலிபான் எண்ணங்களுடன் இருப்பவர் மெகபூபா முப்தி. பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள் என்று கூறி உள்ளார்.

முன்னதாக காஷ்மீர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருந்ததற்கு மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!