"ஹிஜாப் ஸ்கூலுக்கு வெளிய போடணும்.. உள்ளே போடக்கூடாது.." டென்ஷன் ஆன பாஜக அண்ணாமலை !!

Published : Mar 20, 2022, 06:26 AM IST
"ஹிஜாப் ஸ்கூலுக்கு வெளிய போடணும்.. உள்ளே போடக்கூடாது.." டென்ஷன் ஆன பாஜக அண்ணாமலை !!

சுருக்கம்

மத அடையாளம் என்பது இந்து மாணவர்களுக்கும் பொருந்தும். இதில் எதற்காக எதிர்கட்சியினர் அரசியல் கட்சியினர் செய்கின்றனர் என புரியவில்லை. பள்ளிக்குள் மதம் சார்ந்த உடை அணியாமல் பள்ளிக்கு வெளியே அணியுங்கள்.

அண்ணாமலை பேட்டி :

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு அங்கு சாமி தரிசனம் செய்ய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற கட்சி விழாவில் பங்கேற்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். 

முன்னதாக மேலூர் அருகே நயத்தான்பட்டியில் உள்ள வல்லடிகாரர் சுவாமி கோவிலில் வழிபாடு செய்த அவருக்கு, கிராம அம்பலகாரர்கள் வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'உண்மையான தேசியத்தையும் ஆன்மீகத்தையும் நம்புபவர்கள் பா.ஜ.கவில் இருக்கின்றனர். 

மாற்றுகட்சி என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். என்னை பொறுத்தவரை இன்று பாஜகவில் இருப்பவர்கள் நாளை பாஜகவில் இணைய உள்ளவர்கள் அவ்வளவு தான். பா.ஜ.கவின் சித்தாந்தம் புரியும்போது அனைத்து சகோதர சகோதரிகளும் மண் மற்றும் தேசியத்தை  காப்பவர்களாக இருப்பர். இந்த பட்ஜெட் பகல் கனவு பட்ஜெட்.

ஹிஜாப் அணியக்கூடாது :

ஹிஜாப் அணிவது அவர்களின் பாரம்பரியத்தை காப்பது ஆகும்.  மதத்தை விட்டுக் கொடுக்க கூடாது. பள்ளிகளுக்கு எந்த விதமான அடையாளங்களுடனும் வரக்கூடாது என்பது அரசின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத அடையாளம் என்பது இந்து மாணவர்களுக்கும் பொருந்தும்.  இதில் எதற்காக எதிர்கட்சியினர் அரசியல் கட்சியினர் செய்கின்றனர் என புரியவில்லை. பள்ளிக்குள் மதம் சார்ந்த உடை அணியாமல் பள்ளிக்கு வெளியே அணியுங்கள். உங்களது மதத்தை பேணி காப்பாற்றுங்கள்' என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு
இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!