கிஷோர் கே சாமியை தொடர்ந்து கல்யாணராமனுக்கு குண்டாஸ்.. அதிர்ச்சியில் பாஜக..!

Published : Oct 26, 2021, 06:57 PM IST
கிஷோர் கே சாமியை தொடர்ந்து கல்யாணராமனுக்கு குண்டாஸ்.. அதிர்ச்சியில் பாஜக..!

சுருக்கம்

திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்த கிஷோர் கே சாமி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த கல்யாணராமனும்  குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்த கிஷோர் கே சாமி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த கல்யாணராமனும்  குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக செங்கல்பட்டு சிறையில் இருந்து வருகிறார். 

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கல்யாணராமன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் திமுகவின் தர்மபுரி எம்.பி. செந்தில் குமாரின் உதவியாளர் சந்தோஷ் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர், மருத்தவர் ஷர்மிளாவை ஆபாசமாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே அவரை உடனே கைது செய்யவேண்டும் என சென்னை சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில் கடந்த 16ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கல்யாண ராமனை நள்ளிரவில் சென்னை வளசரவாக்கத்தில் வைத்து கைது செய்தனர்.இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு வரும் பாஜக பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!