சுகாதார பேரழிவுக்கு பாஜகவே காரணம்... மே.வங்க வாக்காளர்களே வாய்ப்பை பயன்படுத்துங்கள்.. ப.சிதம்பரம் கோரிக்கை.!

By Asianet TamilFirst Published Apr 21, 2021, 9:03 PM IST
Highlights

தற்போது ஒட்டு மொத்த தேசத்தின் நம்பிக்கையும் மேற்கு வங்காள வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 

மேற்கு வங்காளத்தில் நாளை (22ம் தேதி) ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், ப.சிதம்பரம் மேற்கு வங்க வாக்காளர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்வீட்டர் பதிவில், “நாட்டின் மீது விழுந்துள்ள மருத்துவ அவசர நிலை மற்றும் சுகாதார பேரழிவுக்கு முழு காரணம் மத்தியில் ஆளும் பாஜக அரசுதான். தற்போது ஒட்டு மொத்த தேசத்தின் நம்பிக்கையும் மேற்கு வங்காள வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது. எனவே, மேற்கு வங்க வாக்காளர்கள் தேச மக்களின் குரலை பிரதிபலிக்க செய்யும் வாய்ப்பை ஆறாம் கட்ட தேர்தலில் பெற்றுள்ளனர்.” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 
இன்னொரு ட்வீட்டில், “கடந்த ஆண்டு ஏப்ரலுக்கும் இப்போதைக்கும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? அப்படி ஏதேனும் இருந்தால் அந்த நிலைமை முன்பைவிட மிக மோசமாகத்தான் இருக்கும். புலம் பெயர்ந்தோர் நீண்ட வரிசையில் ரயில் நிலைய வளாகத்தில் காத்திருப்பதை தொலைக்காட்சியில் பார்த்து நெஞ்சமே வலிக்கிறது. ஆனால், ரயில்வே துறை அமைச்சர் ரயில் நிலையங்களில் கூட்டமே இல்லை என்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்கிறார். அப்படி என்றால் இங்கு நோயாளிகளுக்குத்தான் பற்றாக்குறையா?” என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

click me!