ஏலேய்… நகரத்தார் சமூகம் ஒண்ணும் தனி ஆள் இல்ல… ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் அங்கம்லே….. செல்லூர் ராஜுவைக் கதறவிடும் டுவீட்….

 
Published : May 12, 2018, 01:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
ஏலேய்… நகரத்தார் சமூகம் ஒண்ணும் தனி ஆள் இல்ல… ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் அங்கம்லே….. செல்லூர் ராஜுவைக் கதறவிடும் டுவீட்….

சுருக்கம்

BJP h.raja tweet about sellur raju speech about achi

அமைதியாகவும், ஆக்கப் பூர்வமாகவும் இறைபணி மற்றும் கல்விப் பணி ஆற்றிவரும் நகரத்தார் சமூக பெண்களை இழிவாகப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், நகரத்தார் சமூதாயம் தனியாக இல்லை என்றும்,. அவர்கள் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் அங்கம் என்று பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பாரா? என கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களின்  கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்  செல்லூர் ராஜு,  நடிகர் ரஜினிகாந்த் ஒருக்காலும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும், வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கலாம் என தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு நகரத்தார் சமூக பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என  காரைக்குடி நகரத்தார் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செல்லூர் ராஜு தனது  பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அமைதியாகவும், ஆக்கப் பூர்வமாகவும் இறைபணி மற்றும் கல்விப் பணி ஆற்றிவரும் நகரத்தார் சமூக பெண்களை இழிவாகப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், நகரத்தார் சமூதாயம் தனியாக இல்லை என்றும்,. அவர்கள் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் அங்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நகரத்தார் சமூகம் மட்டுமல்ல அனைத்து சமூக மக்களுமே எந்தவித வேறுபாடுகள் இன்றி  தமிழகத்தில் வாழ்ந்து வரும்போது, அந்த சமுதாயத்தினரை இந்துக்கள் என்று பிரித்து எச்.ராஜா கருத்துத் தெரிவித்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!