எல்.முருகனுக்கு பதவி கொடுத்து அவர் சாதியை முன்னேற்றி இருக்கிறோம்.. அசால்ட் செய்த அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Jul 27, 2021, 1:00 PM IST
Highlights

2-ம் முறையாக அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆவதை திமுக தடுத்துவிட்டது. அதிமுக - பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., - மோடி சந்திப்பு நடந்திருக்கிறது. ஆனால் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலைவர்கள் தலையீடு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றார். 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதவது ; அப்துல்கலாம் தமிழ்நாட்டுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர், விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர் என்றார். 2-ம் முறையாக அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆவதை திமுக தடுத்துவிட்டது. 

அதிமுக - பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., - மோடி சந்திப்பு நடந்திருக்கிறது. ஆனால் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலைவர்கள் தலையீடு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றார். மேலும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான். இதை நீதிமன்றத்தில் அவர்கள் எதிர் கொள்வார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர்,  மீனவர் சட்ட மசோதாவில் குறைகள் இருந்தால் அதை பா.ஜ.க கவனத்தில் கொள்ளும். மீனவர்கள் கோரிக்கைகாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். 

மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை என்ற அவர்,   வேண்டுமொன்றே தமிழ்நாடு காங்கிரஸ் அரசியல் ரீதியாக குற்றச்சாட்டு வைக்கின்றனர் என்றார். தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர், எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து  அவர் சமூகத்தை முன்னேற்றி இருக்கிறோம், ஆனால் திமுகவில் இதுபோல் இல்லை, சிலரை வளரவிடுவதில்லை. இஸ்லாமிய மக்களுக்கு அதிகமாக நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. செல்போன் ஒட்டுக்கேட்பு என்ற சர்ச்சை  ஆதாரமில்லாதது, இதை காரணம் காட்டி  திட்டமிட்டு நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கி இருக்கிறது என்றார்.

 

click me!