பாஜக அரசு இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்திய தாக்குதல்..!! மாறி மாறி தூள் கிளப்பும் பிரியங்கா, ராகுல்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2020, 1:13 PM IST
Highlights

அதல பாதாளத்திற்கு சென்ற ஜிடிபி பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்திய தாக்குதலின் விளைவாகத்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஏப்ரல் ஜூன் காலாண்டில் மைனஸ் 23.9 சதவீதம், அதாவது 24 சதவீதம் சரிந்து விட்டதாக இந்திய அரசின் புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.  இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, காரணம் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார சீரழிவு இது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. 

அதல பாதாளத்திற்கு சென்ற ஜிடிபி பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்திய தாக்குதலின் விளைவாகத்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது மிக மோசமானது பொருளாதாரத்தின் அழிவு 2016 இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து தொடங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு கொள்கை முடிவும் மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ராகுல்காந்தி முறைசாரா துறையை தாக்கி பொருளாதாரத்தை மத்திய அரசு அழிப்பதாக கூறினார். 

இதற்கான எல்லா அறிகுறிகளை குறிப்பிட்டு எச்சரித்தும் மத்திய அரசு அதை புறக்கணித்தது என்று கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில் கடைசி காலாண்டான ஜனவரி மார்ச்சில் ஜிடிபி  3.1 சதவீதமாக இருந்தது. இது கடந்த எட்டு ஆண்டு காலத்தில் மிக மெதுவான வளர்ச்சியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு கொரோனாவுக்கு முன்பே பின்னோக்கி தள்ளப்பட்ட பொருளாதாரம், கொரோனா ஊரடங்கு காரணமாக அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறது. இதற்கிடையே பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு என்ன ஆயிற்று என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

 

click me!