பாஜக அரசு புதுச்சேரியை வஞ்சிக்கிறது... நாராயணசாமி வேதனை..!

By Thiraviaraj RMFirst Published Feb 22, 2021, 10:43 AM IST
Highlights

வணிகவரி, கலால் வரி மூலம் மட்டுமே புதுச்சேரிக்கு வருவாய் கிடைக்கிறது. புதுச்சேரி அரசை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும்

புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் நாராயணசாமி.

முன்னதாக,  புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார்.  இதற்காக இன்று 
புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 

அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்தது. எதிர்க்கட்சிளின் பலம் நிமயன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆக உள்ளது. நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து ஓட்டுரிமை அளிக்காத பட்சத்தில் அரசு தப்பிக்க வாய்ப்பு உள்ளது.

 

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி அவர் பேசுகையில், ‘’புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க நினைக்கிறார்கள். அரசின் அதிகாரத்தை படிப்படியாக குறைத்து மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது. 15வது நிதி ஆணையத்தையும் சேர்க்க கோரிக்கை விடுத்தோம். வணிகவரி, கலால் வரி மூலம் மட்டுமே புதுச்சேரிக்கு வருவாய் கிடைக்கிறது. புதுச்சேரி அரசை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும்’’ என அவர் தெரிவித்தார்.

click me!