விவசாயிகளின் பயிர்காப்பீடு திட்டத்தில் கைவைத்த பாஜக அரசு..!! பா.சிதம்பரம் பாய்ச்சல்.!!

By Thiraviaraj RMFirst Published Feb 21, 2020, 7:47 AM IST
Highlights

பயிர் காப்பீடானது விவசாயிகளின் சுயவிருப்பத்தின் அடிப்படையிலானது என்று மத்திய அரசு மேற்கொண்டுள்ள முடிவை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 

T.Balamurukan

பயிர் காப்பீடானது விவசாயிகளின் சுயவிருப்பத்தின் அடிப்படையிலானது என்று மத்திய அரசு மேற்கொண்டுள்ள முடிவை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு, பயிர் காப்பீட்டுக்கான தவணையில் ஒரு பகுதியை மத்திய அரசு மானியமாக வழங்கும்.

இந்நிலையில்,மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த பயிர்காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, பயிர் காப்பீடு திட்டத்துக்கான அரசின் மானியத் தொகை பாசனப் பரப்புக்கு 25 சதவீதமாகவும், பாசனமில்லா பரப்புக்கு 30 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதுஎன்று முடிவு செய்யப்ப்ட்டுள்ளதாக அறிவித்தது மத்திய அரசு.அத்துடன், இந்த பயிர் காப்பீடு திட்டத்தில் சேரும் முடிவும் விவசாயிகளின் சுயவிருப்பத்தின் அடிப்படையிலானது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஏற்கெனவே பயிர் கடன் பெற்றறோர், புதிதாக பயிர்க்கடன் பெறுவோர் என இரு தரப்புக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் விமர்ச்சித்துள்ளார்.

"பாஜக தலைமையிலான மத்திய அரசின் குறுகலான கண்ணோட்டத்துக்கும், தவறான முன்னுரிமைகளுக்கும் மற்றுமொரு உதாரணம் திகழ்ந்துள்ளது. பயிர்க் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைவது அவா்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையிலானது என்று அறிவிக்கப்பட்டதுடன், அந்தத் திட்டத்துக்கான மத்திய அரசின் பங்களிப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை பாதிக்கக் கூடிய, இதைவிட மோசமான நடவடிக்கை வேறேதுவும் இருக்க முடியாது. இத்திட்டத்தில் திட்டத்தில் இணையும் முடிவை விவசாயிகளின் சுயவிருப்பத்துக்கு விடுவது பிற்போக்கானது. பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் வரும் விளை நிலங்களின் அளவு குறையும் என்பதுடன், லட்சக் கணக்கான விவசாயிகள் துன்பங்களுக்கு ஆளாவா்கள். உண்மையில், இன்னும் அதிகமான விளை நிலங்கள் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

click me!