அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைகாக 24ம் தேதி தாஜ்மகால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி ரத்து..!!

By Thiraviaraj RMFirst Published Feb 21, 2020, 12:08 AM IST
Highlights

அமெரிக்க அதிபர் வருகைக்காக உலகப்புகழ் பெற்ற தாஜ்மகால் 24ம் தேதி பொதுமக்கள் பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது.
 

T.Balamurukan

அமெரிக்க அதிபர் வருகைக்காக உலகப்புகழ் பெற்ற தாஜ்மகால் 24ம் தேதி பொதுமக்கள் பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 23,24 தேதிகளில் இந்தியா வர இருக்கிறார்.அவரது வருகைக்காக குஜ்ராத் மாநிலம் தயார் நிலையில் இருக்கிறது. அங்குள்ள ரோடுகள்,மேம்பாலங்கள் அழகுபடுத்தும் வேலைகள் ஓவியங்கள் வரைதல் போன்ற வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக அகமதாபாத் வரும் ட்ரம்ப் குடிசை பகுதிகளை பார்த்து விடக்கூடாது என்பதற்காக 4அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது.


24ம் தேதி டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிடுகிறார்.இதற்காக மதியம் 12.30மதியம் முதல் தாஜ்மகாலை பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு யமுனா நதியை பார்வையிடுகிறார்.அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் முறைகளை பார்வையிடுகிறார். அதன்பிறகு இந்தியா,அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கை மோடியும்,ட்ரம்ப் கையெழுத்திடுகிறரர்கள்.

click me!