எல்லா சிக்கலில் இருந்தும் மீண்டு வர 2 நிபந்தனைகள்: பாஜக விரிக்கும் வலையில் சிக்குவாரா தினகரன்?

 
Published : Apr 14, 2017, 08:41 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
எல்லா சிக்கலில் இருந்தும் மீண்டு வர 2 நிபந்தனைகள்: பாஜக விரிக்கும் வலையில் சிக்குவாரா தினகரன்?

சுருக்கம்

BJP Give Chance to Dinakaran Team

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடுக்கப்படும் அனைத்து அஸ்திரங்களும், தினகரனுக்காக விடுக்கப்படும் மிரட்டல்கள் என்றே சொல்லப்படுகிறது.

ஆனாலும், அடங்காதது போல் காட்டி கொண்டாலும், மறுபக்கம் தம்பிதுரை மூலம், மோடி மற்றும் அமித் ஷாவிடம் சமாதான பேச்சு வார்த்தையை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் தினகரன்.

ஒரு கட்டத்தில், டெல்லியில் உள்ள பாஜக முக்கிய பிரமுகர் ஒருவர், தினகரனிடம், நேரடியாகவே பேசி விட்டதாக கூறப்படுகிறது.

நாங்கள் சொல்லும் அனைத்தையும் பன்னீர் செல்வம் தரப்பினர் , தட்டாமல் செய்து வருவதால், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நீங்கள்தான் அடங்காமல் ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

இதே நிலை நீடித்தால், அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அவர் தினகரனிடம் சொல்லி இருக்கிறாராம்.

இப்போதும் ஒன்றும் கெட்டு போய்விட வில்லை. பாஜக சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். முதலில் உங்கள் எம்.பி க்கள் யாரும் பாஜக வுக்கு எதிராக வாய் திறக்கக் கூடாது. அடுத்து, பாஜக வுடனான கூட்டணிக்கு ஓ.கே. சொல்ல வேண்டும் என்று அவர் தினகரனிடம் கூறி இருக்கிறார்.

மேலும், கூட்டணிக்கு ஓ.கே. சொல்லி விட்டால், உள்ளாட்சி தேர்தலில் இருந்தே அதை தொடங்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். அத்துடன், பாஜகவுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்றால், விரைவில் விஜயபாஸ்கர் கைதை எதிர் பார்க்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

எல்லா துன்பங்களில் இருந்தும் விடுதலை ஆக, இந்த இரண்டு நிபந்தனைகளை கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். 

அதற்கு, உங்களோடு இருப்பதை எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், கூட்டணி குறித்து, நான் தனியாக முடிவெடுக்க முடியாது, சின்னம்மாவை கேட்க வேண்டும். அதேபோல், கட்சியில் உள்ள மூத்த தலைவர்களையும் ஆலோசிக்க வேண்டும் என்றும் தினகரன் கூறி இருக்கிறார். 

எல்லா நிபந்தனையும் ஓ.கே. ஆனால் பன்னீரை முதல்வராக்க வலியுறுத்தினால், அதை எப்படி ஏற்க முடியும்? என்று எதுவும் செய்ய முடியாமல் தினகரன்  குழப்பத்தில் உள்ளார்  என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!