வங்கி கடன் மோசடியில் பாஜக நண்பர்கள்.. பட்டியல் வெளியிட்டது ரிசர்வ் வங்கி.!! ராகுல்காந்தி தம்பட்டம்.

By Thiraviaraj RMFirst Published Apr 28, 2020, 11:30 PM IST
Highlights

நான் நாடாளுமன்றத்தில் மிக எளிதான கேள்வியைத் தான் கேட்டேன். வங்கிக் கடன் மோசடி அதிகம் செய்த முதல் 50 பேரின் பட்டியலை வெளிளியிடுமாறு கூறினேன்.இதற்கு நிதியமைச்சர் பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது ரிசர்வ் வங்கி விவரங்களை வெளியிட்டு விட்டது. அந்த பட்டியலில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர். 

   T.Balamurukan

  சாதாரண சிறுவியாபாரிகள், ஏழை விவசாயிகள் முதல் வீட்டுக்கடன் வாங்கிய நடுத்தர குடும்பத்தினர் வரைக்கும்  வங்கியின் மூலமாக வாங்கிய கடன்களை கட்டவில்லையென்றால் குண்டர்களை வைத்து மிரட்டி பணம் வசூல் செய்து வருகிறது வங்கிகள். ஆனால் பெரும் பணக்கார முதலைகள் வங்கியில் வாங்கிய கடன்களை கட்டாமல் மோசடி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசாங்கம் கடன்களை தள்ளுபடி செய்தும் கொடுக்கிறது.அப்படி இருந்தும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாங்கிக்கு செலுத்தாமல் நாட்டை விட்டே ஓடிப்போனவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். கருப்பு பணத்தை மீட்பேன் என்று சொன்ன நம் பிரதமர் மோடி அதற்கான வேலையில் இன்னும் இறங்கவில்லை. கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்திலும் கூட பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இந்த நேரத்துல கூட அந்த கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை ஏன்? என்பது ஆயிரம் மில்லியன் டன் கேள்வியாக இருக்கிறது.

வங்கியில் கடன் மோசடி செய்தவர்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 50 பேரின் விவரங்களை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது.  சமூக ஆர்வலர் சாகத் கோகலே என்பவர் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக இந்தத் தகவல்களை கேட்டதால் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி உள்ளிட்டோரது பெயர்களும், அவர்களது நிறுவனங்களும் கடன் விவரமும் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரத்தை வைத்து மத்திய அரசை கடுமையாக வசை பாடி ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  
"நான் நாடாளுமன்றத்தில் மிக எளிதான கேள்வியைத் தான் கேட்டேன். வங்கிக் கடன் மோசடி அதிகம் செய்த முதல் 50 பேரின் பட்டியலை வெளிளியிடுமாறு கூறினேன்.இதற்கு நிதியமைச்சர் பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது ரிசர்வ் வங்கி விவரங்களை வெளியிட்டு விட்டது. அந்த பட்டியலில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இதனால்தான் இந்த விவகாரத்தில் உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

click me!