தென் மாநிலங்களில் பாஜக கால் வைக்க முடியாது !! மண்ணைக் கவ்வும் மோடி அரசு!! கருத்துக் கணிப்பில் அதிர்ச்சித் தகவல் …

By Selvanayagam PFirst Published Oct 5, 2018, 8:38 AM IST
Highlights

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலம் உட்பட தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பலத்த அடி கிடைக்கும்  என ஏபிபி என்ற தனியார் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

 

2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி? என்ற கருத்துக்கணிப்பை நடத்திய ஏபிபி நிறுவனம் தற்போது அதன் முடிவை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா என ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து பாஜகவுக்கு வெறும் 21 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என சர்வே கூறுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும்,  நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம் உள்பட பல திட்டங்கள் மக்களின் எண்ணங்களுக்கு விரோதமாக நடத்தப்படுவதே இந்த பின்னடைவுக்கு காரணமாக என அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.

ஆனால்  வட மாநிலங்களில் பாஜகவுக்கு இன்னும்  செல்வாக்கு இருப்பதாகவே  அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்தைப் பொறுத்தே காங்கிரஸ கட்சியோ அல்லது பாஜகவோ அட்சி அமைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பாஜகவுக்கு பலத்த அடி கிடைக்கும் என்றும். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் பாஜகவுக்கு அங்கு வேலையில்லை எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரை திமுக வலுவான கூட்டணி அமைக்கும் பட்சத்தில் மொத்த இடங்களையும் அந்த கூட்டணி அள்ளும் என்றும் ஏபிபி என்ற தனியார் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!