எந்த நாய்க்காவது உன் பெயரை சூட்டியிருக்கிறாயா..? மதத்துவேச ஜார்ஜ் பொன்னையாவுக்கு பாஜக நிர்வாகி பதிலடி..!

Published : Jul 23, 2021, 06:16 PM IST
எந்த நாய்க்காவது உன் பெயரை சூட்டியிருக்கிறாயா..? மதத்துவேச ஜார்ஜ் பொன்னையாவுக்கு பாஜக நிர்வாகி பதிலடி..!

சுருக்கம்

மூடனே  நீ சொல்! இயேசு கிருஸ்து என்ற பெயரை எந்த கிருஸ்துவராவது வைத்துள்ளனரா அல்லது எந்த நாய்க்காவது உன் பெயரை சூட்டியிருக்கிறாயா?  

இயேசு கிருஸ்து என்ற பெயரை எந்த கிருஸ்துவராவது வைத்துள்ளனரா அல்லது எந்த நாய்க்காவது உன் பெயரை சூட்டியிருக்கிறாயா? என பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார். 

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றது கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போட்ட "பிச்சை" என்றும் மோடி, அமித்ஷாவை பற்றியும், பாரதமாதாவை பற்றியும் தரக்குறைவாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், ஹிந்து மதத்தை அவதூறாக பேசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இதனையடுத்து, பாஜக செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’மோடி, அமித் ஷா என எந்த நாய்க்காவது பெயர் இருக்கிறதா?  ஒரு பி ஜே பி காரன் அந்த பெயரை வைத்திருக்கிறானா? ஏனெனில்  அசிங்கமான பெயர் : பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.

முட்டாளே! மோடி என்பதும் ஷா என்பதும் சமூகத்தின் பெயர். நரேந்திரன் என்பது இந்தியாவை உலகளவில் பெருமைப்படுத்திய விவேகானந்தரின் பெயர்.  இந்தியாவின் மூளை முடுக்கெல்லாம் நரேந்திரன் என்ற பெயர் அனைத்து சமூகத்தினராலும் சூட்டப்படுகிறது. ராமன், கிருஷ்ணன் உட்பட அனைத்து கடவுளர்களின் பெயரை ஹிந்துக்கள் வைத்து கொள்வார்கள். 

மூடனே  நீ சொல்! இயேசு கிருஸ்து என்ற பெயரை எந்த கிருஸ்துவராவது வைத்துள்ளனரா அல்லது எந்த நாய்க்காவது உன் பெயரை சூட்டியிருக்கிறாயா?இந்த அற்ப பதரை இன்னும் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசை கண்டிக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Annamalai Goes Viral: "வீடியோ எடுக்காதீங்க... வேலை செய்யுங்கள்!" – வைகை கரையில் அண்ணாமலை வைரல்
Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!