திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு..? ஸ்டாலின் பாணியை கையிலெடுத்த ஓ.பி.எஸ்- எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Jul 23, 2021, 4:24 PM IST
Highlights

தமிழகம் முழுவதும், வரும் 28-ஆம் தேதி உரிமைக் குரல் எழுப்பும் போராட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.

திமுக வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வீடுகளின் முன்பு நின்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
 
தமிழகம் முழுவதும், வரும் 28-ஆம் தேதி உரிமைக் குரல் எழுப்பும் போராட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.நீட் தேர்வு ரத்து தொடர்பான வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், வாக்குறுதி அளித்தபடி, பெட்ரோல், டீசல் விலையில் மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் உரிமைக் குரல் எழுப்பும் போராட்டம் நடைபெறும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

’’விலைவாசி உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வாக்குறுதி,  மழையில் நனைந்து நெல் வீணாவதை தடுக்க, நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும், பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டம் நடைபெறும்.

வரும் 28 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும், தங்களது வீடுகளின் முன்பு பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும் என அதிமுக தொண்டர்களை, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர். ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் இருந்தபோது டாஸ்மாக் கடைகளை மூடக்கோருதல் உள்ளிட்ட பல்வேறு போரட்டங்களை திமுகவினர் வீட்டில் இருந்தபடி பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். தற்போது அதேபோன்ற போராட்டத்தை அதிமுக முன் வைக்க உள்ளது.

click me!