அடக்கடவுளே.. இதுக்காக இத்தனை லட்சம் பேர் காத்திருக்கிறார்களா..? வெளியானது அதிர்ச்சி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 23, 2021, 3:42 PM IST
Highlights

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 நபர்கள் என்றும், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 நபர்களும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10907 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது பெரும் கனவாகவும் அரசின் கொள்கைகளால் காலப்போக்கில் அது கானல் நீராகவும் மாறியுள்ளது. 

எப்படியும் அரசு வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஆனால் அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகளால் அரசு வேலை என்பது  இளைஞர்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி விட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 நபர்கள் என்றும், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 நபர்களும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10907 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1,36,515 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பட்டதாரி ஆசிரியர்கள் 85 ஆயிரத்து 310 நபர்களும்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 711 நபர்களும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!