அறிக்கையை கிழித்து அட்ராசிட்டி செய்த திரிணாமுல் காங் எம்.பி... ரிவீட் அடித்த வெங்கையா நாயுடு.

By Ezhilarasan BabuFirst Published Jul 23, 2021, 6:07 PM IST
Highlights

தற்போது இந்திய ஜனநாயகத்தையும் அதன் மாண்பையும் கேவலப்படுத்தும் முயற்சியாக பெகாசஸ் புகார் எழுப்பப்படுகிறது. இதில் மத்திய அரசு எந்த தவறையும் செய்யவில்லை என அவர் திட்டவட்டமாக கூறினார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பறித்து கிழித்தெறிந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார். பெகாசஸ் என்ற உளவு செயலியின் மூலம் இந்தியாவில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள் என பல தரப்பினரின் தொலைபேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இந்த செய்தி ஆதாரப்பூர்வமாக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இந்தியாவில் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு உளவு பார்க்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் பத்து நாடுகளில் 1571 முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, சமீபத்தில் பதவியேற்ற ஜல் சக்தி அமைச்சர் பிரகலாத் பட்டேல், போன்றோர் குறிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சை நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. நேற்று இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து அறிக்கை ஒன்றை அவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், 2018 ஆம் ஆண்டு இதே போன்று ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. வாட்ஸப் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்படுவதாக கூறப்பட்டன. ஆனால் அதில் எந்த ஒரு அடிப்படை உண்மையும் இல்லை. அது உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து தரப்பினராலும் திட்டவட்டமாக மறுக்கப்பட்டன.

தற்போது இந்திய ஜனநாயகத்தையும் அதன் மாண்பையும் கேவலப்படுத்தும் முயற்சியாக பெகாசஸ் புகார் எழுப்பப்படுகிறது. இதில் மத்திய அரசு எந்த தவறையும் செய்யவில்லை என அவர் திட்டவட்டமாக கூறினார். இவ்வாறு தனது அறிக்கையை சபையில் அவர் தாக்கல் செய்து கொண்டிருந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் வேறு சில எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், அவையின் மையப் பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராக உரத்து முழக்கமிட்டனர். இதற்கிடையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சோனு மத்திய அமைச்சரின் கைகளிலிருந்து அறிக்கையை பறித்து அதை துண்டு துண்டாக கிழித்து எறிந்தார். அப்போது துணைத்தலைவர் ஹரிவன்ஸ் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனாலும் அமளி தொடர்ந்தது.

இந்நிலையில் அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பிடுங்கி கிழித்தெறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு சோன் இந்த கூட்டத்தொடர் முழுவதும் நாடாளுமன்ற அவை விவகாரங்களில் பங்கேற்க தடை விதித்து, அவரை சஸ்பெண்ட் செய்வதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர் பங்கேற்க கூடாது என்றும், அவையில் நடந்த இந்தச் செயலால் தான் மிகவும் வேதனை அடைந்துள்ளதாகவும், வெங்கைய நாயுடு கவலை தெரிவித்தார்.

click me!