சர்வாதிகாரி போல் நடக்கும் அண்ணாமலை!கிருஷ்ணகிரியில் நட்டா இருக்கும்போதே கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர் விலகல்

By vinoth kumar  |  First Published Mar 11, 2023, 7:24 AM IST

இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கை விடுக்கும் வகையில் அண்ணாமலை கூறியிருந்தார். 


பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கிருஷ்ணகிரியில் மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாடிக் கொண்டிருந்த போதே கிருஷ்ணகிரி, தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஐ.டி விங் பொறுப்பாளர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜகவில் இருந்து சிடிஆர். நிர்மல்குமார், திலீப் கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கை விடுக்கும் வகையில் அண்ணாமலை கூறியிருந்தார். அவர் கூறி சில மணிநேரத்தில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கொஞ்சம் கூட அசாராத அண்ணாமலை... பாஜக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு..!

இந்நிலையில், ஜே.பி. நட்டா மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஐ.டி விங் கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் கட்சியிலிருந்து விலகி இருப்பது அண்ணாமலைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் (சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு) பதவியிலிருந்தும், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கின்றேன். 

இதையும் படிங்க;- சி.பி.ராதாகிருஷ்ணன், குஷ்புவை தொடர்ந்து நாராயணன் திருப்பதி புதிய பதவி..!

தம்பி திரு.அண்ணாமலை அவர்களுக்கு சகோதரர் திரு. CTR. நிர்மல்குமார் அவர்களின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார். ஏன் என்றால் தன் இடத்திற்கு வந்து விடுவார் என்ற அச்சம். தம்பி திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) டெல்லி செல்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு IT Wing மற்றும் sports and skill development ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டதினால் தங்களுக்கு நேர் எதிர் குணம் கொண்ட பொறுமை, நிதானம், பண்பு, அன்பு, பாசம், தெளிவு மற்றும் அரசியலுக்கான சகிப்புத்தன்மை உள்ள C.T.R. நிர்மல்குமார் அவர்களின் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

click me!